அறிமுகம்

அகவிழி - உங்களை வரவேற்கிறது. . 
        அறம் -  அக்கு ஹீலர்களின் கல்விப் பணிக்கான இயக்கம். இதில் இலக்கிய ஆர்வமுள்ள நபர்கள் ஒருங்கிணைந்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர். தமுஎகச (அறம் கிளை) உறுப்பினர்களின் இணைய வழி இலக்கியச் சந்திப்பின் பெயர்தான் - அகவிழி.

டெலக்ராம் செயலி மூலம் அகவிழி இணைய வழி இலக்கியச் சந்திப்பு மாதம் தோறும் நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் ஒர் ஆவண / குறும் படம் மற்றும் ஒரு புத்தகம் உறுப்பினர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. படத்தைப் பார்த்து விட்டு தம் கருத்துகளை குழுவில் பதிவிடுவார்கள். அதே போல, புத்தகத்தை வாங்கி, வாசித்து அவர்களுடைய கருத்துகளைக் குழுவில் பதிவிடுவார்கள்.

உறுப்பினர்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டு, நூலாசிரியர் மற்றும் பட இயக்குநருக்கு அனுப்பப்படும். கருத்துகளின் மீதான ஏற்புரையை படைப்பாளியிடம் பெற்று, குழுவில் பதிவிடப்பட்டு, இலக்கியச் சந்திப்பு நிறைவு பெறும்.

அகவிழி இணைய வழி இலக்கியச் சந்திப்பின் மூலம் நடைபெறும் நிகழ்வுகளை இந்த இணையதளத்தின் மூலம் பதிவேற்ற உள்ளோம். ஒவ்வொரு இலக்கியச் சந்திப்பின் நூல் விவரம், உறுப்பினர்களின் கருத்துத் தொகுப்பு, படைப்பாளர் ஏற்புரை . . என அனைத்து விவரங்களும் இத்தளத்தின் மூலம் கிடைக்கும். வாசித்து விட்டு, உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தங்கள் வருகைக்கு நன்றி.