அறம் கிளை பணிகள்
நிகழ்வு - 9 - வரலாற்று வேர்களைத் தேடி பயணம் -1
நிகழ்வு - 8 - படைப்புகளைக் கொண்டாடுவோம் -1, சென்னை
2019 ஜூன் 23 ஆம் தேதி அறம் கிளை அமைப்புக்
கூட்டம் முடிந்த பிறகு பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை படைப்புகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி
நடந்தது. சென்னை இராயப்பேட்டை சி.எஸ்.ஐ. அரங்கத்தில் நடைபெற்ற இதில் எழுத்தாளர்கள்
தேனி சீருடையான், முத்துநிலவன், ச.தமிழ்ச் செல்வன், அ.கரீம், ஆவணப்பட இயக்குநர்கள்
அய்.தமிழ் மணி, திவ்ய பாரதி, வெ.பி.வினோத் குமார், தவமுதல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, கெளரவிக்கப்பட்டனர்.
நிகழ்வு - 7 - கிளை அமைப்பு மாநாடு, சென்னை
நிகழ்வு - 6 - கவிஞர் கலை இலக்கியா புகழஞ்சலிக் கூட்டம், தேனி

நிகழ்வு - 5 - கவிஞர் முத்துச்சாமி நினைவு நிதி

நிகழ்வு - 9 - வரலாற்று வேர்களைத் தேடி பயணம் -1
”வரலாற்று வேர்களைத்
தேடி. . “ முதல் பயணமாக, மதுரை தொல்லியல் பகுதிகளுக்கான பயணத்தை தோழர்கள் கமல் யாழி,
அறிவன் ஆகியோரின் ஆலோசனைகளோடு திட்டமிட்டோம். பத்து வயதிற்கு மேற்பட்ட 14 குழந்தைகளோடு
72 நபர்கள் இணைந்து பயணம் துவங்கியது.
1. கீழடி :
2300 ஆண்டுகளுக்கு
முன்பு நம் முன்னோர்கள் வாழ்ந்த புதையுண்ட நகரம்தான் கீழடி. இதுதான் அந்தக் கால மதுரையாக
இருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஐந்தாம் கட்ட அகழாய்வு துவங்கப்பட்டு
சில வாரங்களே ஆகிய நிலையில் அங்கு செல்ல விரும்பி அனுமதி கோரினோம். புகைப்படம் எடுக்காமல்,
தனிப்பட்ட முறையில் சென்று வர பொறுப்பாளர் அனுமதியளித்தார். தமுஎகச சிவகங்கை மாவட்ட
நிர்வாகிகளும் அனுமதி பெற உதவினார்கள். காலை
பதினோரு மணியளவில் தாமதமாக அங்கு போய்ச்சேர்ந்தோம். ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட குழிகள்
மூடப்பட்டு, அடுத்த கட்ட ஆய்வுகள் துவங்கியிருந்தன. ஆய்வுப் பகுதி முழுவதும் ஆயிரம்
ஆண்டுகளுக்கு முந்திய பானை ஓடுகள் சிதறிக்கிடந்தன. (ஒன்றிரண்டை நம் தோழர்கள் பாக்கெட்டுகளில்
போட்டுக் கொண்டோம்), இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்திய வீடுகளின் சுவர்கள் இப்போது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முழு பானைகள், இன்னும் சில ஓடுகளாலான பொருட்கள் என அனைத்தையும்
பார்த்து விட்டு, அங்கிருந்து கிளம்பினோம்.
2. குன்னத்தூர் சமணப் பள்ளி:
வரிச்சியூர் அருகிலுள்ள
குன்னத்தூர் மலை அடிவாரத்தில் அமைந்திருந்த சமணப்பள்ளியைப் பார்த்தோம். கி.பி. 8 –
9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இடம் இது. திருமலைநாயக்கரின் கல்வெட்டும், மிகப் பழைய தமிழி
கல்வெட்டுகள் மூன்றும், சிற்பங்களும் இருந்தன.
3. குன்னத்தூர் உதயகிரீஸ்வரர் கோவில்
குன்னத்தூரின் அதே
மலையின் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருந்த குடைவரைக் கோயில் இது. மலையைக் குடைந்து,
அதன் நடுவில் லிங்க உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது.
4. ஆனைமலை சமணப்பள்ளி:
ஒத்தக்கடை பகுதியில்
இருக்கும் ஆனை மலை சமணப்பள்ளியைப் பார்த்தோம். தமிழி எழுத்துகள், மலைமேல் அமைந்திருந்த
நீர்ச்சுனை, கல் இருக்கை, கல் படுக்கை என சமணப்பள்ளிகளின் பொது அமைப்புகள் அனைத்தும்
பார்க்க முடிந்தது. மலையேற்றத்தில் தோழர்கள் பலர் சோர்வடைந்தாலும், பெரும்பாலோர் உச்சி
வரை சென்றி திரும்பினர்.
நாகமலை பகுதியில்
உள்ள கீழக்குயில்குடி சமணப்பள்ளி மதுரையின் எண்பெருங்குன்றங்களில் முக்கியமான இடம்.
பிரமாண்டமான மகாவீரர் சிற்பம், சமண எக்கிகளின் சிற்பங்கள், சமணர் படுக்கை, வட்டெழுத்து
கல்வெட்டுகள் ஆகியவற்றைப் பார்த்தோம்.
தமிழகம் முழுவதும்
வரலாற்று ஆர்வத்தை தூண்டிய பசுமை நடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அ. முத்துகிருஷ்ணன்
நம் அழைப்பின் பேரில் அங்கு வந்து காத்துக் கொண்டிருந்தார். அவருடன் எழுத்தாளர். சித்திரை
வீதிக்காரன் மற்றும் இலங்கை வவுனியாவில் இருந்து வரலாற்றுச் சுற்றுலா வந்திருந்த எட்டு
பேர் எங்களுடன் இணைந்து கொண் டனர். சமணர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கல்வி பயிற்றுவித்த
இடத்தில் அனைவரும் மாணவர்களாக அமர்ந்து கீழக்குயில்குடி மற்றும் மதுரை நகரம் குறித்த
வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொண்டோம்.
அ.முத்துக் கிருஷ்ணன்,
சித்திரை வீதிக்காரன், பாரதி பாண்டியன், ஜீவசிந்தன் ஆகியோருக்கு துண்டு அணிவித்து,
புத்தகம் வழங்கினோம். திருமோகூரில் புதிய கல்வெட்டினைக் கண்டுபிடித்த தோழர்கள் கமல்
யாழி, சண்முகலட்சுமி ஆகிய தோழர்களைப் பாராட்டி புத்தகம் பரிசளிக்கப்பட்டது. இப்பயணத்தில்
நம்முடன் பங்கேற்ற 14 குழந்தைகளுக்கு கதைப் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன.
உரை நிகழ்ச்சி முடிந்து
இனிப்புகள், பருத்திப் பால் சாப்பிட்டு விட்டு பேருந்து மதுரை நோக்கி திரும்பியது.
நிகழ்வு - 8 - படைப்புகளைக் கொண்டாடுவோம் -1, சென்னை

ஒவ்வொரு படைப்பாளருக்கும் 9 உறுப்பினர்களைக்
கொண்ட குழு தனித்தனியான பரிசுகளை அளித்தும், அறம் கிளையின் சார்பாக நினைவுப் பரிசு
அளித்தும் சிறப்பு செய்யப்பட்டது. அறம் கிளை உறுப்பினர்கள் 222 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்வு - 7 - கிளை அமைப்பு மாநாடு, சென்னை
2019 ஜூன்
23 தமுஎகச வின் அமைப்பு தினத்தன்று சென்னை இராயப்பேட்டையில் அமைப்பு மாநாடு நடத்தப்பட்டது.
காலை 9:30 மணிக்கு துவங்கி 1:30 மணி வரை நடந்த இம்மாநாட்டில் 222 பிரதிநிதிகள் கலந்து
கொண்டனர். தமுஎகச மாநில நிர்வாகிகள் ச.தமிழ்ச் செல்வன், ஆதவன் தீட்சண்யா, எஸ்.இராமச்சந்திரன்,
லட்சுமிகாந்தன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் சைதை ஜெ ஆகியோர் பங்கேற்று மாநாட்டினை
வாழ்த்தி, வழி நடத்தினர்.
28 பேர் கொண்ட செயற்குழுவும், 7 பேர் கொண்ட
நிர்வாகக் குழுவும் பிரதிநிதிகளின் ஒப்புதலோடு தேர்வு செய்யப்பட்டனர்.

தமுஎகச
மாநிலக்குழு உறுப்பினரும், தேனி மாவட்ட பொருளாளருமான கவிஞர் கலை இலக்கியாவின்
மறைவை ஒட்டி, 2019 மே 19 ஆம் தேதி புகழஞ்சலிக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
தேனி மாவட்டக் குழுவோடு அறம் கிளையும் இணைந்து, இந்நிகழ்வினை நடத்தினோம். இருநூறு
நபர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் மதுரை, தேனி மாவட்டங்களில் இருந்து அறம் கிளைத்
தோழர்களும் பங்கேற்றனர். அறம் கிளை சார்பாக “கலை இலக்கியா படைப்புலகம்” எனும் நூல்
இலவசப் பிரதியாக வெளியிடப்பட்டது.
நிகழ்வு - 5 - கவிஞர் முத்துச்சாமி நினைவு நிதி
தமுஎகசவின் கவிக்குயிலான
கவிஞர் வையம்பட்டி முத்துச்சாமி அவர்களின் மறைவைத் தொடர்ந்து, அவர் குடும்ப நல நிதிக்கான
அழைப்பை மாநிலக்குழு விடுத்தது. நமது கிளை
உறுப்பினர்களின் நிதியாக ரூ. 1,36,550/ தொகையை
அனுப்பினோம். தமுஎகச பிற மாவட்ட நிதிப்பங்களிப்புகளை விட நாம் வழங்கிய தொகை
முக்கியத்துவம் வாய்ந்தது என்று மாநில நிர்வாகிகள் பாராட்டினர்.
நிகழ்வு - 4 - பெண் வாழ்வும், கலை இலக்கியமும் முகாம், சேலம்

தமுஎகச மாநிலக்குழு சார்பில் 2019 பிப்ரவரி 16, 17 இரண்டு நாட்கள் பெண் வாழ்வும், கலை இலக்கியமும் எனும் தலைப்பில் சேலத்தில் புரிதல் முகாம் நடத்தப்பட்டது. அறம் கிளை சார்பில் மூன்று பெண் உறுப்பினர்கள் (தோழர்கள் புனிதவதி, அமுதா, சண்முகலட்சுமி) முகாமில் பங்கேற்றனர்.
தமுஎகசவும், புதுச்சேரி
பல்கலைக்கழகமும், மத்திய அரசின் திரைப்படப் பிரிவும் இணைந்து நடத்திய எட்டாவது சர்வதேச
ஆவணப்பட குறும்படவிழாவை புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்
2019 பிப்ரவரி 1, 2, 3 தேதிகளில் நடத்தின. இதில் தமுஎகச அறம் உறுப்பினர்கள் 18 பேர்
பங்கேற்றனர். பங்கேற்றவர்கள் ஒவ்வொருவரும் தம் விழா அனுபவத்தை தமுஎகச டெலக்ட்ராம் குழுவில்
விரிவாகப் பதிவிட்டனர். தோழர் சரவணபாண்டியராஜா விழாவின் நிகழ்வுகளையும், பலரின் கருத்துகளையும்
தொகுத்து “சிறுகல்லென. . “ எனும் ஆவணப்படமாகத் தயாரித்து வெளியிட்டார்.
நிகழ்வு - 2 - நூல்கள் வெளியீடு
2019 ஜனவரி 16 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில் (எழுத்தாளர் ஞானி நினைவு அரங்கு) நூல்கள் வெளியீடு நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக பேராசியர்.நாகூர் ரூமி, ஊடகவியலாளர். அ.குமரேசன், எழுத்தாளர்.ம.காமுத்துரை மற்றும் எதிர் வெளியீடு பதிப்பாளர் அனுஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வு - 1 - ஒருங்கிணைப்புக் கூட்டம்
தமுஎகச மாநில நிர்வாகிகள்
ச.தமிழ்ச் செல்வன், ஆதவன் தீட்சண்யா, லட்சுமிகாந்தன், மாநில செயற்குழு உறுப்பினர் ம.காமுத்துரை
ஆகியோர் அறம் ஒருங்கிணைப்புக் குழுவுடன் சந்திக்கும் நிகழ்வு 2019 ஜனவரி ஐந்தாம் தேதி
சென்னையில் நடந்தது. இதில் தமுஎகச – அறம் ஒருங்கிணைப்புக் குழுவினர் 17 பேரும் கலந்து
கொண்டனர். தமுஎகச மாநில செயற்குழுவின் அனுமதியின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டிற்கான
உறுப்பினர் பதிவினை அறம் குழுவில் துவங்கினோம்.
கலை இலக்கிய ஆர்வமுள்ள
நபர்கள் 378 பேரை உறுப்பினர்களாகப் பதிவு செய்து, தமுஎகச அறம் குழுவுக்குள் துவங்கப்பட்டது.
தமுஎகச உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, தனி டெலக்ராம் குழு துவங்கப்பட்டது.