தொல்லியல் பயிற்சிகள்

தொல்லியல் பயிற்சிகள்

தமுஎகச, அறம் கிளையும் - செம்பவளம் ஆய்வுத்தளமும் இணைந்து தொல்தமிழ் எழுத்து பயிற்சி முகாம்களை நடத்துகின்றன. மூன்று நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் அறம் உறுப்பினர்கள் பங்கேற்று, தமிழி, வட்டெழுத்து, கிரந்த எழுத்து ஆகிய எழுத்து வடிவங்களையும் தொல்லியல் ஆய்வுகள் தொடர்பான அறிமுகப் பயிற்சியையும் பெறுகின்றனர்.

நிகழ்வு : 1

2018 அக்டோபர் 10, 12, 12 தேதிகளில் தேனி மாவட்டம் கம்பம் நகரில் தொல் தமிழ் எழுத்து மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்வினை அறம் அமைப்பும் - நாகர்கோவில் செம்பவளம் ஆய்வுத் தளம் மற்றும் தேனி மாவட்ட தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றமும் இணைந்து ஒருங்கிணைத்தன.

பயிற்சியில் 90 நபர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கவிஞர்.அ.லட்சுமிகாந்தன் வாழ்த்துரை வழங்கினார். கம்பம் அருகேயுள்ள உத்தமபாளையம் திருக்குணகிரி சமண மலைக்குச் சென்று பார்வையிட்டனர்.




நிகழ்வு : 2

2018 நவம்பர் 28, 29, 30 தேதிகளில் சென்னையில் தொல் தமிழ் எழுத்து மூன்று நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வினை அறம் அமைப்பும் - நாகர்கோவில் செம்பவளம் ஆய்வுத் தளமும் இணைந்து ஒருங்கிணைத்தன.

பயிற்சியில் 60 நபர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எழுத்தாளர். ஆதவன் தீட்சண்யா நிகழ்வில் பங்கேற்று வாழ்த்துரையாற்றினார். எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தின் கல்வெட்டு காப்பகம் சென்று பார்வையிட்டனர்.  


நிகழ்வு : 3

2019 பிப்ரவரி 13, 14, 15 தேதிகளில் சென்னையில் தொல் தமிழ் எழுத்து மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்வினை அறம் அமைப்பும் - நாகர்கோவில் செம்பவளம் ஆய்வுத் தளமும் இணைந்து ஒருங்கிணைத்தன.

நிகழ்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் நாடகக் கலைஞர் .கி.அன்பரசன் மற்றும், தி இந்து தமிழ் நாளிதழின் உதவி ஆசிரியர் கவிஞர்.மு,முருகேஷ் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தின் கல்வெட்டு காப்பகம் சென்று பார்வையிட்டனர்.