6/30/2020

ஒரு குச்சி ஒரு வானம் - நூல் விமர்சனம்

இணைய வழி இலக்கியச் சந்திப்பு - 22
ஒரு குச்சி ஒரு வானம் (கட்டுரை நூல்)
எழுத்தாளர் : பேராசிரியர்.மு.அப்துல் சமது


இணைய வழி இலக்கியச் சந்திப்பு இருபத்து இரண்டில் எழுத்தாளர் மு.அப்துல் சமது அவர்கள் எழுதிய ”ஒரு குச்சி ஒரு வானம்” கட்டுரைத் தொகுப்பு வாசிக்கப்பட்டது. 509 பேர் கொண்ட குழுவில் 300 நூல்கள் வாங்கப்பட்டு, வாசிக்கப்பட்டது.


இது குறித்த கருத்துகளை 2020 ஏப்ரல் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 247 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 107 ஆண்களும், 140 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.